வாழப்பாடியில் பேய் பீதி-எங்கும் வேப்பிலை மயம்!
Subscribe to Oneindia Tamil
சேலம்:சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பேய் பயம் பரவியுள்ளது.
நள்ளிரவில் பேய் வந்து வீட்டு கதவை தட்டி தண்ணிர் கேட்பதாக இப் பகுதியில் புரளி கிளம்பியுள்ளது.
கடந்த சில தினங்களாக வாழப்பாடியில் உள்ள வீடுகளில் நள்ளிரவில் பேய் வந்து கதவை தட்டுவதாகவும், தண்ணீர் கேட்பதாகவும் யாரோ கிளப்பி விட்ட பீதி இப் பகுதி கிராமங்களில் மிக வேகமாகப் பரவியுள்ளது.
இதனால் இரவில் ஆண்களும், பெண்களும் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். இரவில் வீட்டை யார் தட்டினாலும் உள்ளே இருப்பவர்கள் திகில் உறைகின்றனர்.
வீடுகளின் வெளியே வேப்ப இலையை சொருகி வைத்துள்ளனர். இதனால் வாழப்பாடி எங்கும் ஒரே வெப்பிலை மயமாக உள்ளது.












Click it and Unblock the Notifications