திமுக டிரைவர், கண்டக்டர்கள் பேரணி:பஸ்கள் திடீர் நிறுத்தம்- பரிதவித்த பயணிகள்
சென்னை:போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த காலத்தை குறைக்கக் கோரி திமுகவின் தொழிலாளர் முன்னேற்றக் சங்கத்தின் (தொ.மு.ச) சார்பில் சென்னையில் இன்று கோரிக்கை பேரணி நடந்தது.
சென்னையில் தொ.மு.ச. தலைவரும் எம்பியுமான குப்புசாமி தலைமையில் நடந்த பேரணியில் பங்கேற்ற பெரும் எண்ணிக்கையில் டிரைவர், கண்டக்டர்கள் சென்றிவிட்டதால் மாநிலம் முழுவதும் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் பல பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படவில்லை. அவை டெப்போக்களிலேயே நின்றிருந்தன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
சென்னையில் மொத்தம் 2,600 அரசுப் பேருந்துகள் உள்ளன. இதில் 500 பேருந்துகளை இயக்க டிரைவர், கண்டக்டர்கள் இல்லை. இதனால் அவை இயக்கப்படவில்லை.
வழக்கமான நேரத்தில் பஸ்கள் வராததால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்குச் செல்வோர் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
குறைவான பஸ்கள் இயக்கப்பட்டதால் அவை நிரம்பி வழிந்தன. பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து ஆட்டோக்களுக்கும் டாக்சிகளுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டது. இது தான் சமயம் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் இரு மடங்கு கட்டணம் கேட்டு பயணிகளை மேலும் நோகடித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications