கேபிள் டிவி நெட்வோர்க் தொடங்க தமிழக அரசுமுடிவு: லைசென்ஸ் கோரி விண்ணப்பம்
சென்னை:தமிழகத்தில் கேபிள் டிவி நெட்வோர்க் தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் இந்த கேபிள் டிவி நெட்வோர்க் இயங்கும்.
இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தலைமைச் செயலாளர் திரிபாதி, நிதி, உள்துறை, மின்துறை மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் மதுக் கடைகளை டாஸ்மாக் நிறுவனம் மூலம் தமிழக அரசே நடத்துவது மாதிரி கேபிள் டிவி இணைப்புகளையும் அரசே வழங்கும். இதற்கான லைசென்ஸை வழங்கக் கோரி மத்திய அரசை நாடுவது என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
வரும் 11ம் தேதி கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான மேல் முடிவுகள் எடுக்கப்படும்.
இந்த கேபிள் நெட்வோர்க்கால் நேரடியாக பாதிக்கப்படப் போவது சன் டிவி நிறுவனத்தின் சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்.சி.வி) தான். இந்த நிறுவனம் தான் தமிழகத்தில் 85 சதவீத பகுதிகளில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு இணைப்புகளை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications