திருப்பத்தூரில் தேமுதிக கோஷ்டி மோதல்-அடிதடி
திருப்பத்தூர்:புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.
தேமுதிகவின் புதிய நிர்வாகிகள் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை அறிமுகப்படுத்தும் விழா வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர் ராமக்காபேட்டையில் உள்ள விஎஸ்ஆர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் தண்டபாணி அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது முன்னாள் மாவட்ட செயலாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான பயாஸ் அஹமத் குறுக்கிட்டு, மாவட்ட நிர்வாகிகளை மட்டும் அறிமுகம் செய்தால் போதும். ஒன்றிய பொறுப்பாளர்களை நீங்கள் அறிமுகப்படுத்தக்கூடாது என்றார்.
பயாஸின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த பொருளாளர் குமார் என்ற காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏலகிரி ரவி ஆகியோர் சேர்ந்து கட்சிப் பணியை செய்யாதவர்கள் எல்லாம் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
இதையடுத்து பயாஸ் அஹமது, ஏலகிரி ரவி, காந்தி ஆகியோரது ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கெண்டனர். இதில் சட்டை, வேட்டிகள் கிழிந்து இரு தரப்பினரும் காயமைடந்தனர்.
தாக்கப்பட்ட இரு தரப்பினமரும் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications