சிறையில் தச்சு வேலை செய்யும் சஞ்சய் தத்!

Subscribe to Oneindia Tamil

புனே:புனே அருகே உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத், அங்கு தச்சு வேலை செய்து வருகிறாராம்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஆனால் பாதுகாப்பு கருதி பின்னர் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

Sanjay Dutt

தண்டனை பெற்ற கைதிகளுக்குரிய உடை சஞ்சய் தத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை பெற்ற கைதிகள் சிறையில் ஏதாவது ஒரு வேலையை செய்தாக வேண்டும். அதன்படி சஞ்சய் தத்துக்கும் ஒரு வேலை கிடைத்துள்ளது. அது தச்சு வேலை.

எந்த வேலை வேண்டும் என சிறை நிர்வாகம் கேட்டபோது தச்சு வேலையை தேர்வு செய்தாராம் சஞ்சய் தத். சிறையில் உள்ள தச்சுக் கூடத்தில் பயிற்சி தச்சுத் தொழிலாளியாக வேலை பார்க்கிறாராம் சஞ்சய் தத். அவர் விடுதலையாகி வெளியே வரும்போது அவர் வேலை பார்த்ததற்கான கூலி மொத்தமாக வழங்கப்படும்.

அரசு அலுவலகங்களுக்கான டேபிள், சேர் உள்ளிட்டவை இங்குள்ள சிறையில் செய்யப்படுகின்றன.

சிறை வாழ்க்கைக்குப் பழக்கப்பட சஞ்சய் தத் மிகவும் சிரமப்படுகிறாராம். பொது கழிப்பிடத்தைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளதால் அவருக்கு மிகவும் சிரமமாக உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+