மாணவியை அறைந்து ஈவ் டீசிங்:கல்லூரி மாணவர் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவியை கன்னத்தில் அடித்து கலாட்டா செய்த அதே கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் தாழம்பூரில் உள்ள கல்லூரியில் படித்து வருபவர் கோகிலா. அதே கல்லூரியில் படித்து வந்த பாண்டியன் தனது நண்பர்களோடு சேர்ந்து கல்லூரிக்கு வரும் மாணவிகளை கேலி செய்வாராம்.
பாண்டியனும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து, கல்லூரிக்கு வரும் கோகிலாவை வழியில் நிறுத்தி கேலி செய்துள்ளார். இதைத் தட்டிக் கேட்டி கோகிலாவை கன்னத்தில் அடித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கோகிலா, அழுதபடி தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் பாண்டியனை கைது செய்தனர். மேலும் இரு மாணவர்களைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications