ஷெரீப் நாடு திரும்ப பாக். நீதிமன்றம் அனுமதி:எமர்ஜென்சியை அமல்படுத்த முஷாரப் திட்டம்?
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப அந் நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஒரு பக்கம் அமெரிக்கா, மறு பக்கம் மதத் தீவிரவாதிகள், இன்னொரு பக்கம் ஜனநாயக சக்திகள், நீதித்துறையின் அதிரடி என்று பல தரப்பில் இருந்தும் கடும் நெருக்குதலை சந்தித்து வரும் அதிபர் முஷாரப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தவுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் தனக்கு எதிராக உருவாகி வரும் எதிர்ப்பு அலையை ஒடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
![]() |
ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான், அல்-கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவது தொடர்பாக பாகிஸ்தான் அரசின் சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பழங்குடியினர் மாநாட்டில் முஷாரப் கலந்து ெகாள்ள இருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை அவர் ரத்து செய்தார்.
இதற்கு பாதுகாப்பு விஷயங்களே காரணம் என அதிபரின் அலுவலகம் தெரிவித்தாலும், நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்த அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.
நேற்றிரவு மூத்த ராணுவ அதிகாரிகள், தன்னை ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் முஷாரப் திடீர் ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
![]() |
நாட்டின் உச்ச நீதிமன்றம் முஷாரப்புக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது. முஷாரப்பால் நீக்கப்பட்ட தலைமை நீதிபதியை மற்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் மீண்டும் மறு நியமனம் செய்தது.
அதிபரின் தீவிர அமெரிக்க ஆதரவு நிலையால் அவரது அரசை ஆதரிக்கும் மதவாத கட்சிகளிடம் இருந்தும் முஷாரபுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந் நிலையில் தொடர்ந்து ராணுவத் தலைவர் பதவியில் இருந்து கொண்டே மீண்டும் ஜனாதிபதியாக முஷாரப் முயன்று வருகிறார். ஆனால், இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கும் என்று தெரிகிறது.
இதனால் நாட்டில் அரசியல் சட்ட சிக்கல்கள் எழலாம் என அஞ்சப்படுகிறது.
இதையடுத்து தனது எதிரிகளான பெனாசிர் புட்டோ, நவாஸ் ஷெரீப் ஆகியோருக்கு வெள்ளைக் கொடி காட்ட ஆரம்பித்துள்ளார் முஷாரப். இதன் மூலம் தனது எதிர்ப்பாளர்களை அடக்கலாம் என நினைத்தார்.
தன் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று, நாட்டுக்குள் நுழையவும், தேர்தலில் போட்டியிடவும் அனுமதித்தால் முஷாரப் எதிர்ப்பை கைவிட புட்டோ தயாராக உள்ளார்.
ஆனால், முஷாரப்பின் வலையில் விழ ஷெரீப் தயாராக இல்லை. முஷாரப்பை தீவிரமாக ெதாடர்ந்து எதிர்ப்பேன் என்று கூறியுள்ள ஷெரீப், தான் நாடு திரும்ப அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனு மீது இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நவாஸ் ஷெரீபும் அவரது தம்பியும் நாடு திரும்பலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதால் முஷாரபுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இந்த இடியாப்ப சிக்கல்களில் இருந்து விடுபட ஒரே வழி நெருக்கடி நிலை தான் என முஷாரப் நினைக்கிறார்.
நெருக்கடி நிலை அமலானால் உச்ச நீதிமன்றத்தால் அவரை ஏதும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் பாகிஸ்தானில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளது அமெரிக்கா.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைஸ் இன்று காலை முஷாரப்புடன் நெடு நேரம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அவசர நிலையை கொண்டு வர வேண்டாம் என முஷாரபிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.














Click it and Unblock the Notifications