இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம்:லாஸ் ஏன்ஜெலசில் லேசான நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

ஜகார்தா:இந்தோனேஷியாவின் ஜாவா தீவு பகுதியில் மிக பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.5 என்ற புள்ளிகள் அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவானாலும் சுனாமி ஏற்படவில்லை.

இந்திய நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 280 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகவில்லை.

அதே நேரத்தில் நிலநடுக்கத்தின் மையத்தில் இருந்து 110 கி.மீ. தூரத்தில் இருந்த ஜாவா தீவில் கட்டங்கள் மிக பயங்கரமாக அதிர்ந்தன. இந்தோனேஷியாவில் அது நள்ளிரவு நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

கடலோரங்களில் வசிப்பவர்கள் சுனாமி அலைகள் என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு ஓடினர்.

இந் நிலையில் இன்று காலை ஜப்பானில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லாஸ் ஏன்ஜெலசில் லேசான நிலநடுக்கம்:

இந் நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜெலஸ் நகரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.5 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவானது.

கட்டடங்கள் அதிர்ந்ததால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறிக் கொண்டு எழுந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+