பல் துலக்கும்போது பிரஷ்ஷை விழுங்கிய முதியவர்!
கோவை:பல் துலக்கியபோது எதிர்பாராதவிதமாக டூத் பிரஷ்ஷை விழுங்கி விட்டார் ஒரு முதியவர். பின்னர் அறுவைச் சிகிச்சை மூலம் அந்த டூத் பிரஷ் மீட்கப்பட்டு முதியவர் உயிர் பிழைத்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு 60 வயதாகிறது. டீ எஸ்டேட்டில் வேலை பார்த்து வருகிறார். தினசரி காலை டூத் பிரஷ்ஷால் பல் துலக்குவார் ராமசாமி. சில நாட்களுக்கு முன்பும் அப்படித்தான் காலையில் பிரஷ்ஷும், பேஸ்ட்டுமாக பல் துலக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாரத விதமாக பிரஷ், ராமசாமியின் வாய்க்குள் போய் விட்டது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிரமாக பரிசோதித்தனர். எண்டோஸ்கோப்பி மூலம் பார்த்தபோது உணவுக் குழாயில் பிரஷ் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து எண்டோஸ்கோப்பி மூலம் பிரஷ் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது. அதன் பின்னரே ராமசாமி குணமடைந்தார். அவரது மூச்சுத் திணறலும் நின்றது.












Click it and Unblock the Notifications