சாராயம் குடிப்பவர் பாமகவில் இருக்கக்கூடாது-ராமதாஸ்
சிதம்பரம்:சாராயம் குடிப்பவர்கள் எவரும் பாமகவில் இருக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது,
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். உணர்வுகளை கட்டுப்படுத்தினால் பதட்டம் தானாக குறைந்துவிடும். தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஏற்பட்டபோது நான் தான் சென்று ஒற்றுமையை உண்டாக்கினேன்.
கடலூர் மாவட்டத்தில் நடந்த சம்பவத்திற்காக (பாமக, வி.சிக்கள் மோதல்), திருமாவளவனும், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏவும் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள். இது அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. இது போன்ற இணக்கமான சூழ்நிலை உருவானால் கலவரங்கள் ஏற்படாது.
பாமகவினர் விட்டுக் கொடுப்பவர்கள் என்ற நிலையை உருவாக்கினால் தான் ஆத்திரம் அடங்கி அன்பு என்ற உணர்வு மேலோங்கும். அதேபோல் தலித்துகளும், வன்னியர்களும் தண்டவாளங்களை போல் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும்.
ஆடுகள் மோதிக் கொள்ளட்டும் என்று ஓநாய்கள் முயற்சி செய்யும். யார் தவறு செய்தாலும் காவல்துறை விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமகவினர் சாலை மறியல் செய்யக்கூடாது. தேவைப்பட்டால் முக்கிய பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலுவலகங்களின் முன்பு அமைதியாக போராட்டம் நடத்தலாம்.
பாமகவினர் எவரும் சாராயம் குடித்துவிட்டு வன்முறை, போராட்டங்களில் இறங்கக்கூடாது. சாராயம் குடிப்பவர்கள் எவரும் பாமகவில் இருக்கக் கூடாது என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications