19 நாட்களாக திரும்பாத 8 மீனவர்கள்:கவலையில் குமரி கிராமம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:கடந்த 19 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கச் சென்ற 8 குமரி மாவட்ட மீனவர்கள் இன்னும் கரைக்குத் திரும்பாததால், அவர்களது குடும்பத்தினரும், மீனவ கிராமத்தினரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Fishermens Family

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரை விளை பூத்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரான்சிஸ், காமராஜ், சகாயம், கிறிஸ், ஆரோக்கியம், ஆன்ட்ரோசன், யாகப்பன், பீஜூ.

8 பேரும் கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி மீன் பிடிக்க சென்றனர். ஆனால் 19 நாளாகியும் கரைக்குத் திரும்பவில்லை. இவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவல் கிடைக்காததால், இவர்களது குடும்பத்தினர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது குடும்பத்தினரை மீட்டுத் தருமாறு மனு அளித்தனர்.

குமரி மாவட்டத்திலுள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணமல் போவது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்திய கடற்படை தமிழக மீனவர்களை தேடிக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+