தூத்துக்குடி, நெல்லையில் 5 பள்ளி மாணவிகள் மாயம்
தூத்துக்குடி:தூத்துக்குடியில் பள்ளி மாணவிகள் 3 பேரைக் காணவில்லை. அதே போல நெல்லையில் 2 மாணவிகளைக் காணவில்லை.
தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவைச் சேர்ந்தவர் கோதர். இவரது மகள் செய்யது பிஷ்மி நிஷா. அதே தெருவைச் சேர்ந்த காதர் உசேனின் மகள், நஸ்ரின். அண்ணா நகர் 3-வது தெருவைச் சேர்ந்த குணசேகரன் மகள் இருதயரோஸ் சியாமளா. இந்த மூவரும் தோழிகள்.
![]() |
இதில் சியாமளா, நிஷா ஆகியோர் வி.இ. ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கின்றனர். நஸ்ரின் ப்ளஸ் 1 படித்து வருகிறார்.
இந்த மூவரும் திடீரென்று மாயமாகி விட்டனர். பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததால் இது குறித்து மத்திய பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
![]() |
இது குறித்து இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து ஆகியோர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
அவர்களை யாராவது கடத்திச் சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சங்கரன்கோவில் மாணவி மாயம்:
அதே போல சங்கரன்கோவிலில் ஒரு மாணவியைக் காணவில்லை.
![]() |
காமராஜ்நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் வென்னிமுத்து.இவர் சங்கரன்கோவில் நகராட்சியில் துப்புரவு தொழிலாலியாக பணிபுரிந்து வருகிறார். இவரது 2வது மகள் கணகமணி. சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஊழியர் செல்லப்பாவின் மகன் ஆனந்தை காதலித்து வந்தார்.
காதல் விவகாரம் வென்னிமுத்துக்கு தெரியவரவே அவர் கனகமணியிடம் இனி நீ பள்ளிக்கு செல்ல வேண்டாம். தீப்பெட்டி ஆலைக்கு வேலைக்கு செல் என்று கூறிவிட்டார்.
இதையடுத்து கனகமணி கடந்த 22-ந் தேதி காலை தீப்பெட்டி ஆலைக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையில் கனகமணியின் தோழிாயன சாந்தி (14) என்பவரையும் அன்று மாலையில் இருந்து காணவில்லை. இவர் கனகமணி படித்த அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந் நிலையில் வென்னிமுத்து சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் தனது மகள் கனகமணியை ஆனந்த் மற்றும் காளிமுத்து, முருகேசன் ஆகியோர் கட்டாய திருமணத்திற்காக கடத்திச் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.















Click it and Unblock the Notifications