கோவில்பட்டி சர்ச்சில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:கோவில்பட்டியில் உள்ள 300 ஆண்டு பழமை வாய்ந்த சர்ச்சில், கிரீடம், கம்மல், வெள்ளி பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
கோவில்பட்டி காமநாயக்கன்பட்டியில் 300 ஆண்டுகள் பழமையான புனித பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஜெபக் கூட்டம் முடிந்து இரவு பூட்டிவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் பங்குதந்தை அன்புரோஸ் சர்ச்சை காலையில் திறந்தபோது அங்கிருந்த கீரிடம், கம்மல், வெள்ளி ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. சர்ச்சின் ஜன்னல் கம்பிகளை அறுத்து இந்த துணிகர கொள்ளை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. சர்ச்சில் கொள்ளை போன சம்பவம் கேட்டு ஏராளமானோர் சர்ச்சில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications