ரிலையன்ஸ் ஃபிரஷ்- தடை செய்ய முடியாது: பவார்
டெல்லி:சட்டம், ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற பெரிய நிறுவனங்களின் சில்லரை வணிகத்தை நிரந்தரமாக தடை செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் கூறுகையில், சில்லறை வணிகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் ரிலையன்ஸ் பிரஷ் என்ற சில்லறை விற்பனைக் கடைகளை நிறவியுள்ளது.
இந்த நிறுவனம் நேரடியாக சில்லறை விற்பனையில் இறங்கியதை பலர் அரசியல் பிரச்சனையாக்கியுள்ளனர். ரிலையன்ஸ் வருவதற்கு முன்பு இதே போன்று ஸ்பென்சர்ஸ், த்ரினேத்ரா மற்றும் புட்வேர்ல்டு போன்ற கடைகள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் அதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத அரசியல் கட்சிகள் ரிலையன்ஸ் நிறுவனம் சந்தையில் காலடி எடுத்து வைத்தவுடன் சமூக விரோதிகளை தூண்டிவிட்டு அரசியல் பிரச்சனையாக்குகின்றன.
இதுவரை ஆர்பாட்டம் என்ற அளவில் இருந்த இந்த பிரச்சனை, கடந்த வாரம் மாயாவதி ஆட்சி செய்யும் உத்திரப்பிரதேசத்தில் ரிலையன்ஸ், ஸ்பென்சர்ஸ் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இந்திய நாட்டின் சட்டங்கள் எதையும் மீறாத எந்த ஒரு அமைப்பையும் நிரந்தரமாக மூடுவதற்கு, தடை செய்வதற்கு எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் கிடையாது. இருப்பினும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை மாநிலம் சம்பந்தப்பட்டதாகும்.
அதனால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட மாநிலஅரசு எந்தவொரு முடிவையும் எடுக்க அதிகாரமுள்ளது. ஆனால் அந்த முடிவுக்கு எதிராக நுகர்வோர் நலத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி எந்தவொரு அமைப்பையும் சில மணி நேரம் அல்லது சில நாட்கள் மூடலாம். ஆனால் மாநில அரசுகள் நிரந்தரமாக மூட முடியாது. உத்திரப்பிரதேசத்திலும், கேரளாவிலும் பெரிய நிறுவனங்களின் சில்லறை வணிகத்துக்கு விதிக்கப்பட்ட தடை நிரந்தரமாக இருக்காது என்றார் சரத் பவார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications