பிரிந்து வாழ்ந்த் கணவரை தம்பி, கூலிப்br/படையோடு சேர்ந்து கொலை செய்த மனைவி
திண்டுக்கல்:
பத்து வருடங்களாக தன்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்த கணவரை கூலிப் படையை யாட்களுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் மணியக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி(48). இவர் அரியலூர் குடிநீர் வடிகால் வாரியத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். வசதி படைத்த இவருக்கு இப்பகுதியில் ஏராளமான நிலங்கள் உள்ளன.
இவரது மனைவி உமாராணி. உமாராணியின் நடத்தை சரியில்லாததால் 10 வருடங்களுக்கு முன்பே முத்துசாமி அவரை விட்டுப் பிரிந்துவிட்டார். இவர்களுக்கு அனுசுயா என்ற மகளும், சுகதேவ் என்ற மகனும் உள்ளனர்.
அனுசுயா சேலத்தில் மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். சுகதேவ் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
முத்துசாமி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தனது தோட்டத்தில் வந்து தங்குவாராம். இந் நிலையில் கடந்த வாரம் முத்துசாமி தனது தோட்டத்து வீட்டில் கொலையாகிக் கிடந்தார்.
இந்தக் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் முத்துசாமியின் மனைவி உமாராணி தனது தம்பி மற்றும் கூலிப் படையினரை வைத்து இந்தக் கொலையை செய்தது தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
உமாராணிக்கு சில ஆண்களுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் முத்துசாமிக்கு அவரை கண்டித்தார். ஆனால், அதை உமாராணி கண்டுகொள்ளாததால் அவரைப் பிரிந்துவிட்டார்.
குழந்தைகள் இருவரோடு திண்டுக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் உமாராணி வசித்து வந்தார். ஆனால் குழந்தைகளின் படிப்பதற்கான முழு செலவையும் முத்துசாமி ஏற்றுக் கொண்டார்.
தோட்டங்கள், விளைநிலங்கள் எல்லாம் முத்துசாமி பெயரிலேயே இருந்தன.
மகள் அனுசுயாவை உமாராணி தனது தம்பி ராஜகுருவுக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார். இதை முத்துசாமி எதிர்த்தார்.
இதனால் ஆத்திரமடைந்த உமாராணி முத்துசாமியை கொல்ல திட்டமிட்டார். தம்பி ராஜகுரு மற்றும் கூலிப் படையினருடன் தோட்டத்துக்கு சென்ற உமாராணி அங்கு தூங்கிக் கொண்டிருந்த முத்துசாமியை எழுப்பி, தாக்கினர்.
தப்பியோடிய முத்துசாமியை அடித்துக் கொன்று தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து அனைவரும் தப்பிவிட்டனர்.
இப்போது உமாராணி, ராஜகுரு, அவரது நண்பர் செந்தில் மற்றும் கூலிப் படையினர் தலைமறைவகிவிட்டனர். அவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்றனர் போலீசார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications