ஆபாச சிடிக்கள் தயாரித்த 3 வாலிபர்கள் கைது
சென்னை:
சென்னையில் ஆபாச டிவிடி, சிடிக்கள் தயாரித்த 3 வாலிபர்களை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயபுரம் துரைசாகிப் தெருவில் உள்ள உள்ள ஒரு வீட்டில் ஆபாச சி.டிக்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறித்து மத்திய குற்றப்பிரிவின் வீடியோ தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குற்றப்பிரிவு துணை கமிஷனர் தர்மராஜன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
உதவி கமிஷனர் சுதாகர் தலைமையிலான படையினர் இந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஏராளமான கம்ப்யூட்டர்கள், டிவிடி, சிடி ரைட்டர்களைக் கொண்டு ஆபாச சிடிக்கள் தயாரிக்கப்பட்டு வந்தது உறுதியானது. இங்கு முழுக்க முழுக்க ஆபாச சி.டிக்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.
இந்த சிடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கும்பகோணத்தை சேர்ந்த மனோஜ், ராஜ்குமார், செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 70 டிவிடி ரைட்டர்கள், 20 சிடி ரைட்டர்கள், கம்ப்யூட்டர்கள், 10,000க்கும் மேற்பட்ட தமிழ், மலையாள, ஆங்கில, சீன ஆபாச பட சிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இங்கு தயாரித்த சிடிக்களை பர்மா பஜார், சைனா பஜார், ஈவினிங் பஜார், ரட்டன் பஜார் பகுதகிளில் உள்ள கடைகளில் இவர்கள் விற்று வந்துள்ளனர்.
கைதான மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications