சன் டிவியை முடக்குவதா?-வைகோ கொந்தளிப்பு
சென்னை:
கேபிள் இணைப்பு இல்லாமல், வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யும் சன் டிவி குழுமத்தின், சன் டிடிஎச் திட்டத்தினை முடக்குவதற்காக திமுக அரசு காவல்துறையை விட்டு மிரட்டி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொந்தளித்துள்ளார்.
சன் டிவியை வைகோவை விட அதிகமாக யாரும் விமர்சித்து இருக்க மாட்டார். அந்த அளவுக்கு விமர்சித்தவர் வைகோ. இப்போது 'புதிய கணக்குகள்' ஆரம்பமாகிவிட்ட நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யாமல் தமிழக அரசு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டது. இதே போல் தன் குடும்ப பிரச்சனைகளுக்கெல்லாம், அரசின் அதிகாரத்தையும், காவல்துறையினரை ஏவிவிட்டு மிரட்டி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
தன்னுடைய வாரிசுக்கு முடிசூட்டுகின்ற திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், மதுரையில் தினகரன் அலுவலகத்தை சூறையாடி, தீயிட்டு 3 அப்பாவி உயிர்களை பறித்த கொடுமையை நடத்திய தன் மகன் மீது எந்தவொரு நடவடிக்கையையும் முதல்வர் கருணாநிதி எடுக்கவில்லை.
தன்னுடைய பிள்ளைகளுக்காக தொடங்கியுள்ள தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உதவுவதற்காக, இந்தத் தொழிலில் போட்டியாக இருக்கும் சன் டிவி நிறுவனத்தின் மீது அடக்குமுறையை ஏவி விட்டுள்ளார்.
சன் டிவியின் வீடுகளுக்கான நேரடி ஒளிபரப்புத் திட்ட (டிடிஎச்) முகவர்களையும், விநியோகஸ்தர்களையும் பல இடங்களில் காவல்துறையினரை ஏவிவிட்டு கைது செய்துள்ளனர்.
மதுரையில் உள்ள அவரின் மகனின் தூண்டுதலோடு கைது செய்யப்பட்ட முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை மிரட்டுகின்ற வேலையிலும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அரசு அதிகாரத்தை முதல்வர் கருணாநிதி தன் சொந்த குடும்ப நலனுக்காகப் பயன்படுத்துவதும், காவல்துறையைக் கொண்டு கைது நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது என்று வைகோ கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications