ஏரி, கால்வாய் சீரமைப்புக்கு ரூ.2500 கோடி
நாகர்கோவில்:
தமிழகத்தில் ஏரி, கால்வாய் போன்றவற்றை சீரமைக்க ரூ.2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணி துறை செயலளர் ஆதிசேஷய்யா தெரிவித்துள்ளார்.
தமிழக பொதுப் பணி துறை செயலாளர் ஆதி சேஷய்யா குமரி மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
குமரி மாவட்டத்தில் கடல் அரிப்பினால் ஏற்படும் சேதங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கென புத்தன்துறையில் ரூ.3.50 கோடி செலவிலும், இணையம்கிழக்கில் ரூ.3 கோடி செலவிலும், துண்டில் வளைவுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வள்ளவிளையில் ரூ.80 லட்சம் செலவில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. பெரிய காட்டில் ரூ.4.75 லட்சம் செலவில் தூண்டில் வளைவு விரிவாக்க பணியும் நடைபெற்று வருகிறது.
ராமன்துறையில் ரூ.33 லட்சம் செலவிலும், ராஜக்கமங்கலம் துறையில் ரூ.1.41 கோடி செலவிலும், வாணிக்குடியில் ரூ.33 லட்சம் செலவிலும், கோடிமுனையில் ரூ.22 லட்சம் செலவிலும் கடல் அரிப்பு தடுப்பு சுவர்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கால்வாய் மற்றும் ஏரிக் குளங்களை சீரமைக்க ரூ.2500 கோடியை உலக வங்கி வழங்கியுள்ளது. காவிரி கால்வாய் பகுதிகள் இதுவரையிலும் சீரமைக்கப்படவில்லை. இதனை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்படும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications