கம்யூனிஸ்ட்டுகள் மீது இளங்கோவன் தாக்குதல்
சென்னை:
கம்யூனிஸ நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருந்தால், இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மாஸ்கோவில் மழை பெய்தால் இங்கே குடை பிடிப்பவர்கள் என்று மத்திய அமைச்சர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக தாக்கியுள்ளார்.
காந்தி ஜெயந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாள் இன்று சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது,
மகாத்மா காந்தியை கேலி செய்த வெள்ளைக்காரர்கள் இன்று அவருடைய அகிம்சை கொள்கையை ஏற்றுக் கொண்டு உலக அகிம்சை தினமாக அறிவித்துள்ளனர்.
இந்தியா முன்னேற காங்கிரஸ் கட்சி பல நல்ல திட்டங்களை கொண்டு வருகிறது. அந்தத் திட்டங்களையெல்லாம் வெளியே இருந்து ஆதரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு உள்ளே இருப்பவர்கள் (கம்யூனிஸ்டுகள்) எதிர்த்து வருகிறார்கள்.
நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அது தவறு என்று சொல்லி எதிர்க்கின்றார்கள். ஆனால் கம்யூனிஸ நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டிருந்தால் வரவேற்றிருப்பார்கள்.
மாஸ்கோவில் மழை பெய்தால் இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள் குடை பிடிப்பார்கள். இவர்கள் தினமும் காங்கிரஸ் அரசை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருந்தால் மீண்டும் மக்களிடம் ஆதரவு கேட்க நாங்கள் தயங்க மாட்டோம்.
விரைவில் காமராஜர் ஆட்சியை இந்த தமிழக மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். சூழ்நிலை இப்படியிருந்தால் எப்படி அதற்கு சாத்தியமாகும் என்று அனைவரும் நினைக்கலாம். கீழே இருப்பவர்கள் தான் மேலே வருவார்கள். கனவு காண்பதுதான் இவர்களுக்கு வேலை என்று நினைக்காதீர்கள். கனவு ஒரு நாள் நிச்சயம் நனவாகும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications