சட்டசபையைக் கூட்டுகிறார் குமாரசாமி: காங்கிரஸ் உதவியோடு 'மெஜாரிட்டி'?!
பெங்களூர்
கர்நாடக அரசியலில் புதிய திருப்பமாக அம்மாநில சட்டசபையில் தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். வருகிற 18ம் தேதி சட்டசபையைக் கூட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் குமாரசாமி தலைமையில் இன்று பெங்களூரில் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட எந்த அமைச்சரும் கலந்து ெகாள்ளவில்லை.
கூட்டம் முடிந்த பின்னர் மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்சர் பசவராஜ் ஹோரஹட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற 18ம் தேதி சட்டசபைக் கூட்டத்தைக் கூட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பல்வேறு பிரச்சினைகள் இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் என்றார். ஆனால் அன்றையக் கூட்டத்தில் தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பான உத்திகளை வகுக்க முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவெ கெளடாவின் தலைமையில் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.
இந்த நிலையில் சட்டசபையைக் கூட்டவும் தனது அரசின் மீது வாக்கெடுப்பு நடத்தவும் குமாரசாமி தீர்மானித்திருப்பதன் மூலம் கர்நாடக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாக்கெடுப்பின்போது குமாரசாமி அரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்து ஆட்சியைக் காப்பாற்ற உதவக் கூடும் என்று தெரிகிறது.
இந்தப் புதிய சூழ்நிலையின் பின்னணியில் திட்டமிட்டபடி, கெளடா-பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
எடியூரப்பா டெல்லி விரைந்தார்:
இந்த நிலையில், துணை முதல்வர் எடியூரப்பா இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். குமாரசாமி ஒப்பந்தப்படி ஆட்சியை ஒப்படைக்க மறுத்து வருவதால் இடைத் தேர்தலை சந்திக்க பாஜக தயாராகி விட்டது.
இதுகுறித்து கட்சி மேலிடத்துடன் விவாதிக்க எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார்.
ஆனால், காங்கிரஸ் 'மனசு வைத்தால்' தான் இடைத் தேர்தல் வரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications