முதல்வர் முன்னிலையில் கட்டிப் புரண்ட காங்கிரஸார்!
புதுச்சேரி:
புதுச்சேரி வந்த காங்கிரஸ் பொறுப்பாளர் அருண்குமார் முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி மற்றும் மாநிலத் தலைவர் நாராயணசாமியின் ஆதரவாளர்கள் கடுமையாக அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக சமீபத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அருண்குமார் நியமிக்கப்பட்டார். இதையடுத்து முதல் முறையாக நேற்று அவர் சென்னைக்கு வந்து தமிழக காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார்.
வழக்கமாக போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு கோஷ்டியினர் காங்கிரஸ் பொறுப்பாளர்களை வரவேற்பார்கள். ஆனால் என்றும் இல்லாத அதிசயமாக நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அமைதியான முறையில் அருண்குமார் வரவேற்கப்பட்டார்.
சென்னை விஜயத்தை முடித்துக் கொண்டு அருண்குமார் புதுச்சேரி சென்றார். அங்கு கட்சித் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் ப.சண்முகம், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் வரவேற்றனர்.
வரவேற்பு நடந்து கொண்டிருக்கும்போதே, முதல்வர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள், மாநில காங்கிரஸ் எம்.பி. நாராயணசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த ரங்கசாமி ஆதரவாளர்கள், நாராயணசாமிக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதையடுத்து இரு தரப்பினரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். சட்டைகள் கிழிந்தன, வேட்டிகளும் டார் டாராகின. இதைப் பார்த்த அருண்குமார் பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
அவர்களை கட்சி நிர்வாகிகள் கடுமையாக முயன்று பிரித்து விட்டனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நிலையில் இருந்த அருண்குமார் பின்னர் முதல்வர் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications