சென்னையில் அகோரம்: சிசுவை கடித்துக் குதறித் தின்ற நாய்கள்
சென்னை: சென்னை கொடுங்கையூரில், பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசுவை தெரு நாய்கள் கடித்துக் குறி தின்ற கொடூரம் நடந்துள்ளது.
கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகரில் பிரவீண் குமார் என்ற மருத்துவக் கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டுக்கு வெளியே நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டது.
இதையடுத்து எழுந்து வந்து பார்த்தார் பிரவீண் குமார். அங்கு வீட்டுக்கு அருகே உள்ள குப்பை மேட்டில் 5க்கும் மேற்பட்ட நாய்கள், எதையோ போட்டி போட்டுக் கத்தியபடி கடித்துத் தின்று கொண்டிருந்தன.
இதைப் பார்த்த பிரவீண் குமார் அருகில் சென்று பார்த்தார். நாய்கள் ஒரு சிசுவை குதறியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அவருக்கு மூச்சே நின்றது போலானது.
உடனடியாக, அருகில் இருந்த ஒரு கம்பை எடுத்து நாய்களை விரட்டினார். பின்னர் சிசுவின் அருகில் போய் பார்த்தார். அந்த பரிதாபத்துக்குரிய சிசு, ஏற்கனவே இறந்து போயிருந்தது. அதன் இரு கைகளும் காணவில்லை.
உடனடியாக போலீஸாருக்கு பிரவீண் குமார் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து அந்த சிசுவின் சிதிலமான உடலை மீட்டனர்.
தவறான உறவில் இந்தக் குழந்தை பிறந்திருக்கலாம், குழந்தையைப் பெற்ற பெண் இங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications