கொழும்பில் திடீர் மின்தடை - மக்கள் பதட்டம்!
கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பில் நேற்று அதிகாலை அரை மணி நேரத்திற்கு மின்சாரம் தடைபட்டது. இதனால் தலைநகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இது பாதுகாப்புப் படையினர் நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.
கொழும்பில் நேற்று அதிகாலை சுமார் அரை மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நகரமே இருளில் மூழ்கியது. இதனால் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப் போகிறார்களோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்தது.
பின்னர் இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில், விமான தாக்குதல் உஷார் நிலைக்காகவும், பயிற்சிக்காகவும்தான் இந்த மின் தடை ஏற்படுத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் ஒத்திகைதான் இது என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமைதான், கொழும்பு விமான நிலையத்தை விடுதலைப் புலிகள் தாக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியானது. இதையடுத்து கொழும்பு நகரம் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மின்தடை ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
விமானத் தாக்குதல் எச்சரிக்கையால், விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராணுவ, காவல்துறை வாகனங்களையும் சோதனை செய்த பின்னரே பாதுகாப்புப் படையினர் உள்ளே அனுமதிக்கின்றனர்.
துறைமுகத்திற்குள் வரும் அனைத்து காவல்துறை வாகனங்களும் முன் கூட்டியே கடற்படையின் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications