நள்ளிரவில் பாம்பு கடித்து 3 குழந்தைகள் பலி
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு கடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுராந்தகத்தை அடுத்துள்ள கருங்குழியைச் சேர்ந்த பூபாலனின் மகன் ராம்கி (10). 5ம் வகுப்பு படித்து வந்தான்.
பூபாலனின் அக்கா குழந்தைகளான நந்தினி(5) மற்றும் நவீன்(3) ஆகியோருடன் ராம்கி தூங்கிக் கொண்டிருந்தான்.
அப்போது நள்ளிரவில் விஷப் பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது. தூக்கத்தில் நந்தினியின் கால் பாம்பின் மீது பட்டதும் பாம்பு நந்தினியின் காலை கொத்திவிட்டது. பாம்பு கொத்தியதால் அலறிய நந்தினியின் சத்தம் கேட்டு ராம்கியும், நவீனும அலறியடித்துக் கொண்டு எழுந்துள்ளனர்.
அவர்களையும் பாம்பு கொத்தியது. இதனால் குழந்தைகள் 3 பேரும் கூச்சலிட்டனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெரியவர்கள் வந்து பார்த்தபோது, கொத்திய பாம்பு வீட்டை விட்டு வெளியேறி புதருக்குள் மறைந்து விட்டது.
பாம்பு கொத்தியதில் நந்தினி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற இருவரையும் காப்பாற்ற செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இருவரும் பலியாகிவிட்டனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications