தேசிய பெண்கள் விளையாட்டுப் போட்டி நாளை மதுரையில் துவக்கம்!
மதுரை: பெண்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை மதுரையில் தொடங்குகின்றன.
மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நாளை மாலை 3 மணிக்கு துவங்கும் இந்தப் போட்டிகள் 23ம் தேதிவரை இரவு பகலாக தொடர்ந்து நடக்கும். தட களம், வாலிபால், கபடி, கைபந்து போட்டிகள் போன்றவை நடக்கவுள்ளன.
போட்டியின் துவக்க விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி, கால்நடைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளையாட்டு மேம்பாட்டு செயலாளர் மிஸ்ரா, செயலாளர் மோகன்தாஸ் காந்தி, மதுரை மாவட்ட கலெக்டர் ஜவஹர், மதுரை நகர காவல்துறை ஆணையாளர் நந்தபாலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான வீராங்கனைகள் மதுரையில் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications