துபாயில் அதிகரிக்கும் பிக்பாக்கெட்!!
துபாய்: துபாயில் பிக்பாக்கெட் உட்பட பல்வேறு பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.
துபாயில் தொழில், வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா தொடர்பாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் வருகிறார்கள். இவர்களின் வருகை துபாய் அரசுக்கு ஒரு வழியில் வருமானத்தை கொடுத்தாலும் ஏகப்பட்ட பிரச்சனை ஏற்படுவதால் அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இதில் குறிப்பாக பிக்பாக்கெட் திருடர்களின் அட்டூழியத்தால் அந்நாட்டு அரசு என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறது.
பிக்பாக்கெட் அடிப்பவர்கள் காலை நேரத்தில் அவசரகதியில் அலுவலகம் செல்வோரையே குறிவைத்து நடத்துகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது வரிசையாக நின்று பேருந்தில் ஏறாமல் கும்பலாக இருந்து பயணியை பேருந்துக்குள் ஏற்றிவிடுவது போல் தள்ளிவிட்டுவிட்டு பிக்பாக்கெட் அடித்து விடுகின்றனர்.
இதையடுத்து பேருந்துகளில் கேமராக்கள் பொருத்த அந் நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications