தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
திருநெல்வேலி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மிரட்டல் வந்துள்ளதால், தமிழக - கேரள எல்லையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களை குண்டு வைத்து தகர்க்க தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை தாக்க தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக அம்மாநில உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சபரிமலையில் கமாண்டோ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மாறுவேடத்திலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்குள் வரும் வாகனங்களையும் தீவிர சோதனை நடத்திய பின்னரே அனுமதிக்கின்றனர். மேலும் தமிழக கேரள எல்லையான திருநெல்வேலி மாவட்டம் புளியரையில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் லாரிகளை மட்டுமே இந்த படையினர் சோதனை செய்கின்றனர். ஆனால் பேருந்துகள் உள்ளிட்ட பிற வாகனங்களையும் சோதனையிட வேண்டும். மேலும் ஐயப்ப பக்தர்கள் அதிகம் செல்லும் இந்த பாதையில் தீவிர ரோந்து பணியும், வாகன சோதனையும் நடத்தப்பட வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள போலீஸார், வெடிகுண்டுகளைக் கண்டறியும் மெட்டல் டிடெக்டர் இல்லாமல் வாகன சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications