அரிசி கடத்தல் பற்றி தகவல் தந்தால் பரிசு: தேனி கலெக்டர்
Subscribe to Oneindia Tamil
தேனி: ரேசன் அரிசி கடத்தல் பற்றி தகவல் தந்தால் பரிசு வழங்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஹர்சஹாய் மீனா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்டத்தில் இருந்து பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் அரிசி அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ரேசன் அரிசி கடத்தல் பற்றி பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம். இதன்படி ரேசன் அரிசி கடத்துபவர்கள் பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தால் ரூ. 500 சன்மானம் வழங்கப்படும்.
பொது மக்கள் ஆதரவு கொடுத்தால் ரேசன் அரிசி கடத்தும் சமூக விரோத செயல்களை தடுக்கலாம். அதே போன்று போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications