மன நலமற்ற பெண்ணின் குழந்தையை தத்தெடுக்க போட்டா போட்டி

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பழனியில் மன நலம் பாதித்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையை தத்தெடுக்க போட்டி ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த அய்யம்புளி சாலையில், மன நலம் பாதித்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களாக சுற்றி கொண்டு இருந்தார்.

மனிதாபிமானம் இல்லாத சில காமுகர்களால் அவர் கர்ப்பம் ஆனார். இதை கண்டு பலரும் வருத்தப்பட்டனர். ஆனால் அவருக்கு உதவிக் கரம் நீட்ட யாரும் முன்வரவில்லை.

இந்த நிலையில் அவருக்கு பிரசவ வழி ஏற்பட்டது. இதனால் அவர் துடிதுடித்தார். அதை கண்டு பரிதாபப்பட்ட சிலர் ஆட்டோ பிடித்து பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சேர்க்கப்பட்ட அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

அந்த குழந்தையை பாதுகாத்து வளர்க்க அந்த பெண் போதிய மன நலமும், உடல் பலமும் இல்லாததால் அக் குழந்தையை வளர்க்க தனியார் அல்லது தொண்டு நிறுவனம் முன் வந்தால் கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

இதையறிந்த பலர் குழந்தையை தத்து எடுக்க போட்டி போட்டு வருகின்றனர். இதனால் குழந்தையை யாருக்கு கொடுக்கலாம் என்று மருத்துவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+