திருட்டு விசிடி வழக்கில் அழகிரி விடுதலை செல்லும்: உயர்நீதிமன்றம்
மதுரை: திருட்டு விசிடி வழக்கிலிருந்து மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டது செல்லும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2003ம் ஆண்டு, தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அழகிரிக்குச் சொந்தமான வீடியோ கடையில் போலீஸார் சோதனை நடத்தினர்.
இதையடுத்து கடையில் ஆயிரக்கணக்கான திருட்டு விசிடிக்கள் இருந்ததாக கூறி அழகிரி உள்ளிட்ட இருவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை மதுரை 5வது நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அப்போது தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அழகிரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அழகிரி அப்பீல் செய்தார். அந்த மனுவை ஏற்ற செஷன்ஸ் நீதிமன்றம், அழகிரியை வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி விடுவிக்கப்பட்டார் அழகிரி. இதை எதிர்த்து காவல்துறை திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவு ஆய்வாளர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கடையின் உரிமையாளராக அழகிரி இருந்தபோதிலும், கடையின் நிர்வாகத்தை மேனேஜர் தாமோதரனிடம்தான் வழங்கியுள்ளார். மேலும், சம்பவம் நடந்ததாக கூறப்படும் தேதியில் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்துள்ளார்.
எனவே இந்த வழக்கில் அழகிரிக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. எனவே வழக்கிலிருந்து விடுவித்து செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications