துபாய் விபத்தில் இந்திய பெண் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் நடந்த விபத்தில் கான்பூரைச் சேர்ந்த பெண் செய்தித் தொடர்பாளர் பலியானார்.
நிதி கர்க் என்ற அந்தப் பெண் துபாய் மீடியா சிட்டியில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அபுதாபியில் இருந்து வந்து கொண்டிருந்த இவரது கார் ஜெபல் அலி சாலையில் பிற கார்கள் மீது மோதியது.
பலத்த காயமடைந்த இவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தார்.












Click it and Unblock the Notifications