எஸ்.ஐயை சுட்டுக் கொல்ல முயன்ற ரவுடி சுயம்பு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகுவிளை பகுதியை சேர்ந்தவர் சுயம்பு. தற்போது பால் பண்னை அருகே உள்ள டேனியல் தெருவில் வசித்து வருகிறார். ரவுடி லிங்கம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்.
இவர் மீது கொலை, பணம் பறிப்பு, அடிதடி என பல வழக்குகள் உள்ளன. இதனால் ரவுடிகள் பட்டியலில் இவர் பெயர் உள்ளது.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாலை புதுக்குடியிருப்பு பிஸ்லரி ரோட்டில் நடந்து வந்த மணிகண்டன் என்பவரை கத்தியை காடடி மிரட்டி ரூ.150 கேட்டுள்ளார். இதுகுறித்து வடசேரி இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.
நேற்று இரவு வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் சந்தை அருகே நின்று கொண்டிருந்த சுயம்புவை கைது செய்ய சென்றார். அப்போது சுயம்பு திடீரென தான் மறைத்து வைத்திருந்த ரிவால்வரை எடுத்து சுடுவதற்காக பாய்ந்தார். சுதாரித்து கொண்ட எஸ்.ஐ ரிவால்வரை கால்களால் தட்டி விட்டார்.
உடனடியாக மற்ற போலீசார் உதவியுடன் சுயம்புவை மடக்கி பிடித்தனர். கைது செய்யப்பட்ட சுயம்புவிடம் இருந்து ரிவால்வார் மற்றும் அவர் வைத்திருந்த 16 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications