தா.கிருட்டிணன் கொலை-சித்தூர் நீதிமன்றத்தில் அழகிரி, மதுரை துணை மேயர் ஆஜர்
சித்தூர்: திமுக முனனாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உட்பட 13 பேர் சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
திமுகவின் முன்னாள் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருட்டிணன் மதுரையில் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையை ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் அனைத்தையும் கடந்த 15 தினங்களுக்கு முன் மதுரை போலீசார் சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நேற்று துவங்கியது.
இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேர் சித்தூர் நீதிமன்றத்தில் நேற்று காலை ஆஜராயினர்.
குற்றம் சாட்டப்பட்ட அழகிரி உட்பட 13 பேரிடமும் நீதிமன்ற ஊழியர்கள் கையொப்பம் வாங்கிய பின்னர், அனைவரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி அதை வரும் ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் தமிழில் இருக்கும் வழக்கு குறித்த வாக்குமூலங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் உத்தரவிட்டார்.
அழகிரி நீதிமன்ற வளாகத்தில் ஆஜரானதையடுத்து ஏராளமான திமுக தொண்டர்களும் அங்கு குவிந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications