உ.பி. குண்டுவெடிப்பு: 2 தீவிரவாதிகள் கைது
லக்னெள: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பா ஹர்கத் உல் ஜிஹாதி அல் இஸ்லாமி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை உ.பி. போலீஸார் இன்று கைது செய்தனர்.
கடந்த மாதம் 23ம் தேதி உ.பி. மாநிலத் தலைநகர் லக்னோ, வாரணாசி, பைசலாபாத் ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தீவிரவாதிகள் சைக்கிள்களில் வைத்த குண்டுகள் வெடித்ததில் இந்த அசம்பாவிதம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஹர்கத் அல் ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்குத் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கம்ப்யூட்டரில் வரையப்பட்ட தீவிரவாதிகளின் படங்களை வைத்து போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அஸம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த தாரிக் மற்றும் ஜன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காலித் முகம்மது ஆகிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் தாரிக் யுனானி டாக்டர் ஆவார். ஹர்கத் உல் ஜிஹாதி அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர். காலித், மதரசா ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
உ.பி. தொடர் குண்டு வெடிப்பில் காலித்தான் முக்கிய சதிகாரராக செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாரபங்கி ரயில் நிலையத்தில் வைத்து இவர்கள் இருவரையும் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப்படை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ஒரு கிலோ ஆர்.டி.எக்ஸ், வெடிபொருள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களுக்கும், மே 23ம் தேதி மாயாவதி முதல்வராகப் பதவியேற்ற சில மணி நேரங்கலில் நடந்த சைக்கிள் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications