பணியிடங்கள் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை-தடுக்க கடும் சட்டம்
பெங்களூர்: பெண்களுக்கு பணியிடங்களில் நடைபெறும் செக்ஸ் கொடுமைகளை தடுக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் கிரிஜா வியாஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் பெண்களிடம் குறும்பு செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. அப்படி குறும்பு செய்பவர்களை போலீசார் பெரும்பாலும் கைது செய்வதில்லை.
அந்த நிலையை மாற்றி, பெண்களை குறும்பு செய்பவர்கள் மீதும் கற்பழிப்பு வழக்கு தொடரும் வகையில் சட்டம் கொண்டு வர பரிந்துரைத்துள்ளோம்.
கற்பழிப்பு வழக்குகளில் கடும் தண்டனை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் ஈவ் டீசிங் குற்றத்தை, கற்பழிப்புக்கு இணையாக கருத வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளோம்.
நாட்டில் கற்பழிப்புகளும், மானபங்க செயல்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கோடைகால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், பணியிடங்களில் நடைபெறும் செக்ஸ் கொடுமைகளை தடுக்க வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்.
பெண் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசைக் கோரியுள்ளோம் என்றார் வியாஸ்.












Click it and Unblock the Notifications