மெட்ரோ ரயில் திட்டம்-ஆரம்ப கட்ட பணிகள் துவக்கம்
சென்னை: சென்னையில் ரூ. 9,757 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சட்டசபையில் நேற்று ஆளுநர் ஆற்றிய உரையில் கூறப்பட்டுள்ளதாவது
சென்னை மாநகர் பகுதி தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இப்பகுதியின் போக்குவரத்துப் பிரச்சனைகளுக்கு உடனடியான மற்றும் நிலையான தீர்வுகள் தேவைப்படுகின்றன.
சென்னை போக்குவரத்துத் தேவையை கருத்தில் கொண்டு ரூ. 9,757 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். இதற்காக டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.
சென்னைத் துறைமுகத்திற்கான சாலை இணைப்பை மேம்படுத்துவதற்காக, ரூ.1,468 கோடி மதிப்பீட்டில் மதுரவாயலிலிருந்து சென்னைத் துறைமுகத்திற்கு உயர்த்தப்பட்ட வேக வழித்தடம் (மேம்பால சாலை) ஒன்றை அமைக்க மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாநகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில், வெளிநாடுகளில் பல நகரங்களில் உள்ளது போல மாநகரின் முக்கியச் சாலைகளை இணைக்கும் அதிவேக வட்டச்சாலை அமைக்கக் கருதப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக் கூறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து வீடுகளிலும் கலர் டிவி:
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறே, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாதோர் அனைவருக்கும் அவற்றை வழங்கும் திட்டம் இவ்வரசால் செயல்படுத்தப்பட்டு, இதுவரை 24 லட்சத்து 58 ஆயிரத்து 411 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது கட்டமாக, 34 லட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஆணைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, இந்தியாவிலேயே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து வீடுகளிலும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான் என்ற சாதனையை விரைவில் எட்டுவோம் என கூறப்பட்டுள்ளது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications