கரூரில் இந்து முன்னணி மா.செயலாளருக்கு கத்தி குத்து!

Subscribe to Oneindia Tamil


கரூர்:கரூரில் பேருந்தில் சென்று கொண்டிருந்த இந்து முன்னணி செயலாளர் கத்தியால் குத்தப்பட்டார்.

கரூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளரான ராஜா வேலாயுதம்பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் கரூரில் நடந்த இந்து முன்னணி செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வேலாயும்பாளையத்துக்கு டவுன் பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தார்.

வெங்கமேடு பஸ் ஸ்டாப்பில் பேருந்து நின்றபோது ஏறிய நபர் ராஜா அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே வந்து நின்றார்.

அப்போது மேலே மோதுவதாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந் நிலையில் அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாவை குத்தினார். இதில் ராஜாவின் முகத்தில் கத்தி பாய்ந்தது.

இதையடுத்து அந்த நபர் பஸ்சில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார்.

ராஜா கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் அங்கு குவிந்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

இது குறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து, கத்தியால் குத்திய நபரைப் பிடிக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+