தகவல் அறியும் 'ஆயுதம்' - போலீஸ் கணக்கை ஆய்வு செய்த கராத்தே மாஸ்டர்!

தகவல் அறியும் உரிமை சட்டம் மிகப் பெரிய ஆயுதமாக திகழ்கிறது. இதை மக்கள் இன்னும் சரிவர புரிந்து கொள்ளாமல் உள்ளனர். இதை பிரபலப்படுத்த அரசுகளும் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தனி நபர் ஒருவர் காவல் நிலைய கணக்கு வழக்குகளை சரி பார்த்துள்ள செயல் நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளு. இப்படி தனி நபர் ஒருவர், காவல் நிலைய கணக்கு வழக்குகளை ஆய்வு செய்துள்ளது தமிழகத்திலேயே இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூரை சேர்ந்தவர் கராத்தே மாஸ்டர் மதியழகன்.
இவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் கடந்த 5 வருடங்களாக நடைபெற்ற ஸ்டஷன் வரவு - செலவு கணக்கு, ஹோட்டல்களில் பார் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் விவரம், சாராயம் விற்பனை செய்தவர்கள் விவரம், திருட்டு வழக்குகள் மற்றும் டி.எஸ்.பி. ஆய்வறிக்கைகள் உள்பட 19 தலைப்பின் கீழ் தகவல் கேட்டு கடந்த ஜூன் 15 ம் தேதி அன்று விண்ணப்பித்தார்.
விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் அவருக்கு தகவல் ஏதும் வரவில்லை. இதையடுத்து அவர் தமிழக உள்துறைக்கு மீண்டும் மனு அனுப்பினார்.
இந்த மனுவை விசாரித்த உயர் அதிகாரிகள் இது குறித்த தகவல்களை மனுதாருக்கு அளிக்க தகவல் உரிமை கமிஷருக்கு பரிந்துரைத்தனர்.
மேலும், தகவல் சம்பந்தமாக விண்ணப்பதாரர் ஆய்வு செய்ய அனுமதி வழங்கவும், 30 நாட்களுக்குள் தகவல் வழங்காவிட்டால் விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களை இலவசமாக பிரதி எடுத்து கொடுக்க வேண்டும், மேலும் ப.வேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விண்ணப்பதாரர் ஆய்வு செய்ய அனுமதிக்கும்படி கூடுதல் எஸ்.பி. முருகசாமிக்கு தகவல் உரிமை கமிஷனர் உத்திரவிட்டார்.
இதனையடுத்து விண்ணப்பதாரர் மதியழகன் நேற்று காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications