நாடு முழுவதும் சமையல் கேஸ் கடும் தட்டுப்பாடு!!

நாடு முழுவதும் காஸ் சிலிண்டர்களுக்கு சமீப காலமாக தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. விநியோக் குறைவும், பயன்பாடு அதிகரிப்புமே இதற்குக் காரணம்.
இருப்பினும், ஹோட்டல்கள், சிறு உணவு விடுதிகளை நடத்துவோர் பெரும்பாலும் வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர்களைத்தான் பயன்படுத்துகின்றனர். கள்ளச் சந்தையில் அதிக விலை கொடுத்து இவர்கள் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாங்கி விடுவதால் பொதுமக்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்படுவதாக மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், காஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு பெருமளவில் அதிகரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதால், மக்கள் அதிக அளவில் சிலிண்டர் கேட்டு புக் செய்வதாலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் காஸ் சிலிண்டர்கள் கிடைப்பது பெரும் சிரமமமாக உள்ளது. சிலிண்டர் கேட்டு ஏஜென்சியில் புக் செய்தால் குறைந்தது 20 நாட்கள் கழித்துத்தான் கிடைக்கிறது. சில நேரங்களில் இது 30 நாட்கள் வரை கூட ஆவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் 10 நாட்கள் கழித்து கிடைத்து வந்த காஸ் சிலிண்டர்கள் தற்போது 15 நாட்களாக அதிகரித்துள்ளது.
இரண்டு சிலிண்டர்கள் வைத்திருப்போருக்கு பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு சிலிண்டர் இணைப்பை மட்டும் பெற்றிருப்போரின் நிலைதான் மகா அவலமாக உள்ளது.
சிலிண்டர் தீர்ந்த பின்னர் அவர்கள் சமையலுக்கு படும் பாடு பெரும் பாடாக உள்ளது.
இந்த நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் சப்ளையை அதிகரிக்குமாறு எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், இன்னும் சில நாட்களில் நிலைமை சரியாகி விடும். அதன் பின்னர் காஸ் பற்றாக்குறை இருக்காது என்றார் அவர்.
தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தராஞ்சல், இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், டெல்லி, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெருமளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications