அரசு கேபிள் டிவி நாளை முக்கிய ஆலோசனை

முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி-தயாநிதி மாறன் இடையே மோதல் எழுந்த பின் தமிழகத்தில் உள்ள கேபிள் இணைப்புகளை ஒழுங்குபடுத்தி வீடுகளுக்கு கேபிள் இணைப்புகளை வழங்க அரசே கேபிள் டிவி கழகத்தை நடத்த தீர்மானித்தது. இதற்காக அரசு கேபிள் டிவி கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டது.
இதன் மூலம் சன் டிவியின் சுமங்கலி கேபிள் நெட்வொர்க்கின் (எஸ்.சி.வி) ஆதிகத்தை ஒடுக்க திட்டமிடப்பட்டது.
அரசு கேபிள் டிவி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரேஜஷ்வர் சிங் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்கள், எல்காட் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் உள்ளிட்டோர் இயக்குநர்களாக இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், திடீரென இந்த கேபிள் டிவி கழகம் தொடங்குவது தொடர்பான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால் அழகிரி-மாறன் இடையே ஏதோ ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதப்பட்டது.
இதற்கிடையே டி.டி.எச் சேவை தொடர்பாக சன்-கலைஞர் டிவி இடையே பின்னணியில் மோதல் எழுந்தது. இந்த சேவையை யார் குறைந்த கட்டணத்தில் வழங்குவது என்பதில் போட்டா போட்டி ஏற்பட்டது.
இந் நிலையில் தான் திடீரென சுமங்கலி கேபிள் விஷனுக்கு போட்டியாளரான ஹாத்வே நெட்வோர்க்குக்கு அரசின் ஆதரவும் அழகிரியின் ஆதரவும் கிடைத்ததாகத் தெரிகிறது. இதனால் எஸ்சிவி ஆபரேட்டர்களை போலீசார் கூட்டிச் சென்று ஹாத்வேயில் சேருமாறு வலியுறுத்தி வருவதாக புகார் எழுந்தது.
இது முதல்வருக்கே தெரியாமல் நடக்கும் அராஜகம் என தயாநிதி மாறன் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் தந்தார்.
இந் நிலையில் கிடப்பில் போடப்பட்ட அரசு கேபிள் கார்ப்பரேசனை துவக்கும் பணிகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
கேபிள் இணைப்புகளை எந்த வகையில் வழங்குவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க நாளை முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை கேபிள் டிவி கழகம் கூட்டியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நாளை மாலை தலைமைச் செயலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications