அமைச்சர் முற்றுகை-திமுக நிர்வாகி நீக்கம்
கூடலூர்: தமிழக கதர் வாரியத் துறை அமைச்சர் ராமச்சந்திரனை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவகாரத்தில் திமுக நிர்வாகி கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
தமிழக கதர்வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூடலூரில் ஒரு திருமண விழாவுக்கு வந்தார். தனது ஆதரவாளர்களுடன் அவர் தங்கியிருந்தார்.
அப்போது அங்கு திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்த கூடலூர் திமுக ஒன்றியச் செயலாளர் லியாகத் அலி மற்றும் ஆதரவாளர்கள் அமைச்சரிடம் ஒன்றிய அலுவலகத்திற்கு வராமல் எப்படி வேறு இடத்தில் தங்கலாம் என அமைச்சரிடம் வாக்கு வாத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தனது காரில் ஏறி செல்ல முயன்ற அமைச்சரை லியாகத் அலி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பதட்டம் உருவானது. இதையடுத்து போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அமைச்சரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் எதிர்ப்பாளர்கள் அமைச்சரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதில் கார் சேதமடைந்தது. பின்னர் விழா முடிந்து வெளியே வந்தபோது ராமச்சந்திரனை தாக்கவும் முயற்சி நடந்தது. ஆனால் போலீஸார் சமயோஜிதமாக அதைத் தடுத்து விட்னர்.
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியான மணிகண்டன், கூடலூர் காவல் நிலையத்தில் கூடலூர் திமுக ஒன்றியச் செயலாளர் லியாகத் அலி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் புகார் கொடுத்தார். அதன் பேரில் லியாகத் அலி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் ராமசந்திரன் கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட லியாகத் அலி மற்றும் அவருடன் இணைந்து செயல்பட்ட இன்னொரு கட்சி நிர்வாகி ஆகியோரை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்து திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications