அமைதிப் பேச்சு: இலங்கை தமிழர் கட்சி கோரிக்கை
கொழும்பு: அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசிய கூட்டணி எம்.பி. ஸ்ரீகந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முறையாக அமல்படுத்த முன்வர வேண்டும். கொழும்பையும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் ஏ9 சாலையைத் திறக்க முன்வர வேண்டும்.
அப்படி செய்ய இலங்கை முன்வந்தால், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர தமிழர் தேசியக் கூட்டணி முயற்சிக்கும்.
நாங்கள் மக்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். விடுதலைப் புலிகளை சமாதானப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் அரசுதான் அதற்கான முன் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.
வடக்கிலும்,தெற்கிலும் உள்ள மக்கள் எந்த நேரமும் அச்ச உணர்வுடன் வாழ்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனவே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு இதுதான் சரியான நேரமாகும்.
மூடப்பட்ட ஏ9 நெடுஞ்சாலையை மீண்டும் திறப்பதன் மூலம் வடக்கில் உள்ள தமிழர்களின் பொருளாதார நிலைமை சீர்படும். இதை நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை அரசு எடுக்க வேண்டும்.
இந்த சாலையைத் திறப்பதன் மூலம் வடக்கில் உள்ள தமிழர்களின் துயரம் அகலும், அவர்களின் வாழ்க்கை சகஜ நிலைக்கு வரும்.
இந்த முடிவை இலங்கை அரசு எடுத்தால், விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு இட்டு வர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் அவர்.
தமிழர் தேசிய கூட்டணி, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications