பிரின்சிபாலுக்கு அடி, உதை
மும்பை: மும்பையில் ஆபாசப் படம் எடுத்த ஆசிரியரைக் கண்டிக்காத பள்ளி முதல்வரை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்களும், சிவசேனா தொண்டர்களும் முதல்வரை அடித்து உதைத்தனர். அவரது முகத்திலும் கரியைப் பூசினர்.
மும்பை, பான்டுப் பகுதியில் உள்ள கிங் ஜார்ஜ் உயர்நிலைப் பள்ளி. இங்கு பி.பி.சால்வே என்பவர் முதல்வராக இருக்கிறார். அவினாஷ் சால்வே என்பவர் ஆசிரியராக இருக்கிறார்.
7ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் அவினாஷ் மிரட்டிதாகவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த மாணவியை ஆபாசமாக படம் எடுத்து அதை பலருக்கும் அனுப்பி வைத்ததாகவும், தெரிகிறது.
இந்த நிலையில் இன்று பள்ளிக்குப் பெற்றோர்களும், சிவசேனா தொண்டர்களும் திரண்டு வந்தனர். அப்போது ஆசிரியர் அவினாஷ் பள்ளியில் இல்லை. இதனால் முதல்வரைப் பிடித்து அனைவரும் அடித்தனர். அவரது முகத்தில் கரியையும் பூசினர்.
ஆசிரியர் அவினாஷ் இது போல செய்வது முதல் முறை இல்லையாம். ஏற்கனவே சில முறை இதுபோல செய்துள்ளாராம். இந்த முறை அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில்தான் அனைவரும் திரண்டு பள்ளிக்கு வந்தனர். ஆனால் அவினாஷ் தப்பி விட்டார், முதல்வர் சால்வே மாட்டிக் கொண்டார்.
சர்ச்சைக்குரிய அவினாஷ் சால்வே மீதும், முதல்வரைத் தாக்கியதாக பெற்றோர்கள், சிவசேனா தொண்டர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆந்திராவில் நடந்த அக்கிரமம்:
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 15ம் தேதி வாக்கில், ஆந்திராவில் உள்ள ஒரு சமூக நலப் பள்ளியின் மாணவிகள் 15 பேர் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முதல்வரால் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரிஜி. இங்குள்ள அரசுப் பள்ளி மாணவியருக்கான விடுதியில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
இவர்களில் இரண்டு பேர் கர்ப்பமாகியுள்ளனர். பின்னர் அவர்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications