விடைகளுடன் தரப்பட்ட கேள்வித் தாள்!
மதுரை: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தின் ஆய்வக உதவியாளர் பணிக்கு நடந்த தேர்வின்போது, கேள்வித்தாளுடன் பதில்களும் இணைக்கப்பட்டு கொடுக்கப்பட்டதால், தேர்வை எழுதியவர்கள் தங்கு தடையின்றி கடகடவென்று பரீட்சை எழுதிய கூத்து நடந்துள்ளது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய மதுரையில் எழுத்துத் தேர்வு நடந்தது.
இதில் 60 பெண்கள் உள்பட 96 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். வினாத்தாள் கொடுக்கப்பட்டதும், அதை வாங்கிப் புரட்டிப் பார்த்த, தேர்வுக்கு வந்திருந்த சிலரது முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
எந்தவித படபடப்பும் இல்லாமல் விறுவிறுவென தேர்வு எழுத ஆரம்பித்தனர். தயக்கம் இல்லாமல் கடகடவென்று, சந்தோஷத்துடன் தேர்வு எழுதிய அவர்களைப் பார்த்து தேர்வுக் கண்காணிப்பாளருக்கு சந்தேகம் வந்தது.
அவர்களிடம் சென்று கேள்வித்தாளை வாங்கிப் பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி. காரணம், கேள்வித்தாளுக்குப் பின்னால், அதற்குரிய விடைகள் அடங்கிய ஒரு தாளும் இடம் பெற்றிருந்தது. அந்த விடைத்தாள், வினாக்களை திருத்துவோருக்கானது. அது கேள்வித்தாளுடன் வந்துள்ளது.
இதையடுத்து தேர்வு நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மாலையில் மறு தேர்வு வைக்கப்பட்டது. வேறு கேள்வித்தாள் கொடுத்து தேர்வு நடத்தப்பட்டது.
இந்தக் குளறுபடிக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களை வெகுண்டெழ வைத்த சிபிஎஸ்இ குளறுபடி! நடந்தது என்ன? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications