மிரட்டல் வழக்கில் சுபா. இளவரசன் விடுவிப்பு
அரியலூர்: டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தமிழர் விடுதலை இயக்க தலைவர் சுபா. இளவரசன் விடுதலை செய்ப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலை இயக்க தலைவராக உள்ள சுபா. இளவரசன் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் , மிரட்டல், கொள்ளை, போன்ற பல வழக்குகள் உள்ளன.
மேலும், அரியலூரைச் சேர்ந்த டாக்டர் சின்னசாமியின் வீட்டில் கடந்த 1999 ம் ஆண்டு புகுந்து சுபா. இளவரசன் மற்றும் அவரது கூட்டாளிகள் 22 பேர் தங்கள் இயக்க வளர்ச்சிக்கு ரூ 1 லட்சம் பணம் தேவை என்றும், அதை தராவிட்டால் டாக்டரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக ஜெயகொண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சுபா. இளவரசன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு அரியலூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி பரஞ்சோதி முன்னிலையில் நடந்து வந்தது. சுபா. இளவரசன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு விசாரணையில் போலீசாரின் குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படாததால் சுபா. இளவரசன் உள்ளிட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிபதி உத்திரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications