எஸ்.ஆர்.எம். பல்கலையில் சிவாஜி பெயரில் பிலிம் இன்ஸ்டிடியூட்
சென்னை: சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் ரூ. 10 கோடி செலவில் புதிய திரைப்பட பயிற்சிக் கழகம் உருவாக்கப்படவுள்ளது.
சென்னை காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு மிலன் 08 என்ற 3 நாள் கலை நிகழ்ச்சி நடந்தது.
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து பேசுகையில், ரூ. 10 கோடி செலவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் திரைப்படக் கழகம் உருவாக்கப்படும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தாருடன் இணைந்து இந்த திரைப்பட கழகம் உருவாக்கப்படும்.
வருகிற கல்வியாண்டு முதல் இந்த திரைப்படக் கழகம் செயல்படும். ஒரு கல்வி நிறுவனத்தில், திரைப்படக் கழகம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றார் பச்சமுத்து.
இந்த திரைப்படக் கழகத்தின் ஆலோசனைக் குழுவில் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இடம் பெறவுள்ளனராம். வெளிநாடுகளைச் சேர்ந்த திரைத்துறை பிரபலங்களும் இங்கு வந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்தவுள்ளனர்.
திரைப்படத் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த திரைப்படக் கழகம் செயல்படும்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனின் மூத்த மகனும், சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ராம்குமார் பேசுகையில், நானும், எனது தம்பி நடிகர் பிரபுவும் இந்த திரைப்படக் கழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம்.
சர்வதேச தரத்திலான திரைப்படத் தொழில்நுட்ப வசதியுடன் கூடியதாக இந்த கழகம் செயல்படும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications