ஓகனேக்கலில் மறியல்-கன்னட அமைப்பினர் கைது
சாம்ராஜ் நகர்: ஓகனேக்கல் அருகே, தமிழக அரசின் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்திய ஓகனேக்கல் ஹொரதா சமிதி மற்றும் ஓகனேக்கல் உலிசி ஹொரதா சமிதி ஆகிய கன்னட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு ஓகனேக்கலில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோரி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதில் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் மூக்கை நுழைத்துள்ளன.
கர்நாடகத்தில் 7 நாட்கள் முதல்வராக இருந்தவரும், வருகிற சட்டசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனவருமான எதியூரப்பா தலைமையில் பாஜகவினர் ஓகனேக்கலுக்குள் அத்துமீறி நுழைந்து சமீபத்தில் சலசலப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் இரு கன்னட அமைப்புகள் சார்பில் தமிழக, கர்நாடக எல்லையில், ஓகனேக்களுக்கு அருகில் உள்ள புஞ்சனூர் என்ற இடத்தில் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் காரணமாக தமிழகத்திலிருந்து எந்த வாகனமும் கர்நாடகத்திற்குள் நுழையாமல் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஓகனேக்கல் குடிநீர்த் திட்டம் கைவிடப்படும் வரை போராட்டம் தொடரும் என கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளதால், தமிழக, கர்நாடக எல்லையில் பதட்ட நிலை நிலவுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications