இன்டர்நெட் மைய உரிமையாளர் கொலை-கள்ள காதலிக்கு வலை
சென்னை: இன்டர்நெட் மைய உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மந்தைவெளி ராபர்ட்சன்பேட்டையில் வசித்தவர் சீனிவாசன் (36). இவரது மனைவி ஜெயக்கொடி. இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளான். மந்தைவெளி ஆர்.கே.மடம் பகுதியில் ஐஸ்கிரீம் பார்லரும் இன்டர்நெட் மையமும் நடத்தி வந்தார்.
அவரது கடையில் வேலை பார்த்த மாலதியுடன் சீனுவாசனுக்கு தொடர்பு ஏற்பட்டது. இன்டர்நெட் மையத்திலேயே மாலதியை தங்க வைத்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் இன்டர்நெட் மையத்துக்கு அருகே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த லட்சுமிகாந்தன் என்பருடன் மாலதிக்கு தொடர்பு ஏற்பட்டது.
இதையறிந்த சீனிவாசன், லட்சுமிகாந்தனை அங்கிருந்து காலி செய்தார். ஆனால் மாலதி தனது கள்ளக் காதலை தொடர்ந்தார். இதனால் சீனிவாசன் மாலதியை சந்திப்பதை தவிர்த்தார். இன்டர்நெட் மையத்தையும் காலி செய்ய திட்டமிட்டார். இதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இது தொடர்பாக நீலாங்கரை, பட்டினபாக்கம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறியிருந்தனர்.
இந்நிலையில் மாலதி கொடுத்த வரதட்சணை கொடுமை புகாரில் சீனிவாசனை கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். தன்னையும் மனைவி ஜெயக்கொடியையும் தாக்க முயன்றதாக சீனுவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாலதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந் நிலையில் நேற்று மாலை பைக்கில் வந்த சீனிவாசனை வழிமறித்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.
இந்தக் கொலை தொடர்பாக மாலதி, அவரது தம்பி உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications