லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர், ஏட்டு டிஸ்மிஸ்
தூத்துக்குடி: லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுவுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் அடிதடி வழக்கு தொடர்பாக கடந்த 2000ம் ஆண்டு புளியம்பட்டி போலீசில் புகார் செய்ய சென்றார். இந்த வழக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் லஞ்சம் கேட்டுள்ளனர்.
அப்போது, இன்ஸ்பெக்டராக இருந்த கனகசபாபதிக்கு ரூ.1000, ஏட்டு சிவராமனுக்கு ரூ.200 லஞ்சமாக கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஓழிப்பு போலீசில் கணேசன் புகார் செய்தார்.
லஞ்ச ஓழிப்பு துறை டிஎஸ்பி மலுக்முதலி தலைமையில் அதிகாரிகள் கண்காணித்தனர். லஞ்சம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர் கனகசபாபதியையும், ஏட்டு சிவராமனையும் கைது செய்தனர்.
இந்த வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் விசாரித்து இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. தற்போது இன்ஸ்பெக்டர் கனகசபாபதி சோழவந்தானிலும், ஏட்டு சிவராமன் திருச்சி மாவட்டம் வையம்பட்டியிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் துறை ரீதியான நடவடிக்கையாக இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications