பரோலில் வந்த ஆயுள் தண்டனைக் கைதி மர்ம சாவு
Subscribe to Oneindia Tamil
சேரன்மகாதேவி: பரோலில் வந்த, இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற கைதி மர்மமான முறையில் மரணமடைந்தார்.
சேரன்மகாதேவி அம்மநாதர்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 1997ம் ஆண்டு தனது தாய் ஜானகி அம்மாளை வெட்டி படுகொலை செய்த வழக்கிலும், 1998ம் ஆண்டு கணவன், மனைவியை வெட்டிக் கொலை செய்த வழக்கிலும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பரோலில் முருகன் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள பள்ளி அருகே முருகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்தத சேரன்மகாதேவி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications